கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம்

கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் ஒசூர் ரோடு, ஆத்ரா ஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் குத்துவிக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தார். கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் தலைவர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். துணைத் தலைவர் முத்துகுமார் வைர விழா கொண்டாட்டத்தில் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் பற்றிய விரிவுரையை எடுத்துரைத்தார்.



பின்னர், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழாவின் முத்திரை சின்னத்தை அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சோமசுந்தரம் வெளியிட்டார்.



அதனைத் தொடர்ந்து, டிப்ளமோ தர மேலாண்மை படிப்பிற்கான புதிய கோர்ஸ் சங்கத்தின் சார்பில் துவங்கப்பட்டது. இதுகுறித்து கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் மற்றும் டிப்ளமோ தர மேலாண்மை கோர்ஸ் குழுவின் தலைவர் ஸ்ரீனிவாசன் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக டீன் சரவண செல்வன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டிப்ளமோ தர மேலாண்மை படிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.



பின்னர், டிப்ளமோ முதுகலை பட்டப்படிப்பில் பயின்ற 30 மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் உறுப்பினர் விவேக் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கொடிசியா தலைவர் சுந்தரம் மாணவர்கள் மத்தியில் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார். பின்னர், அனைவருக்கும் பட்டமளிப்பு சான்றிதழை வழங்கி கெளரவித்தார். இறுதியில் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.



இந்நிகழ்வில், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...