வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசு அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுரை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்துதுறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்ததாவது :-  வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் மாவட்டத்திலுள்ள அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பாலங்கள், சாலைகள் ஆகியவை பழுதடைந்திருந்தால் சரிசெய்யவும், பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்திடவும் தேவையான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.



மேலும், ஆற்றுக்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் உரிய முறையில் அறிவிக்கைகள் அளித்திட வேண்டும். மணல் மூட்டைகள் போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மின்சார வாரிய அலுவலர்கள் மின்கம்பிகளிலுள்ள உள்ள பழுதுகள் மற்றும் மின்கம்பங்களை உடனடியாக சரி செய்திட வேண்டும். மின்சார வாரிய அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

மழைநீர் சேகரிக்க ஏற்ற வகையில் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் குட்டைகளை ஏற்கனவே தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள குளங்களையும் விரைந்து தூர்வாரிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழங்கல் துறை பொதுமக்களுக்கு தேவையான அளவிற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படா வண்ணம் சுகாதாராத்தினை பேணிகாத்திட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையினரும், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் கிராமங்கள் தோறும் தொடர்ந்து நடத்திட வேண்டும். கால்நடைகளை மேடான பகுதிகளில் தங்கவைக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுமக்கள் அவசர உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த அவசர சேவையானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகின்றது. சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து துறை அலுவலர்களும், பணியாளர்களும் தலைமையிடத்தில் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர் (பொள்ளாச்சி) காயத்ரிகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல முதுநிலை மேலாளர் தவெங்கடப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...