மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கொடிசியா சிறு தொழில் சங்கங்கள் மனு

தமிழகத்தில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை ஆங்காங்கே மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபானக் கடையை மூட உத்தரவிடக்கோரி கோவை கொடிசியா சிறு தொழில் சங்கங்கள் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில், இரண்டு புதிய தொழில்நிறுவனங்களை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது இரு நிறுவனங்களில் ஒன்று, கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்கா, கோவை,  பல்லடம் - கொச்சின் தெற்கு பகுதியில் இருந்து 25 கி.மீ தொலைவில் 138 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது.  இதில், கொடிசியாவின் சிறு தொழில் சங்கங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்து உள்ளனர்.  இந்த தொழில் நிறுவனங்களின் மூலம் சுமார் 4,000 ஊழியர்கள் வேலைவாய்ப்பை பெற உள்ளனர்.

தற்போது கள்ளபாளையம் தொழில்நிறுவனத்தை அமைப்பதற்கான வெளிக்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் பெறும் நிலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.

இந்த சூழலில், கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்காவில் தொழில்நிறுவனம் அமைய உள்ள இடத்தை ஒட்டி, புதிய மதுபானக் கடை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், பல கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் எங்களது நிறுவனத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பொருட்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லா நிலை நிலவுகிறது.

இதேபோல, மதுபானக் கடை அமையவிருக்கும் பகுதியின் எதிரே 20மீ தொலைவில் கோவில்களும் உள்ளது. இதில், நாள்தோறும் வழிபாடு நடத்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால். பொதுமக்களும். பெண்களும் இந்த மதுபானக் கடையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்காவில் புதிய மதுபானக் கடை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...