வறட்டுப்பாறை எஸ்டேட்டில் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்டவசமாக உயிர்தப்பினர்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 5 மணியளவில் தீடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 



காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் மணி என்பவரின் வீட்டின் அருகாமையில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்ததில் மணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. 



அப்போது வீட்டில் இருந்த மணி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மனைவி அனிதாவுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அருகாமையில் இருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு எஸ்டேட் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வீட்டின் கூரை முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தது. 



இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் வால்பாறை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராட்சத மரம் விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே குடியிருப்பு மற்றும் பள்ளி பகுதிகளில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அரசு மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேலும் பல உயிர்சேதங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...