மாற்றுத்திறனாளிக்கான சலுகை வழங்க புறக்கணிப்பதால் தற்கொலை செய்யப்போவதாக ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 18 வருடங்களாக அரசிடம் சலுகை கேட்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து மாரியம்மாள் கூறியதாவது:-

மாற்றுத் திறனாளியான நான் பெட்டி கடை வைக்க கடன் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். பல முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் தனக்கு கடன் வழங்கப்படவில்லை.

மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் என்னால் தொடர்ந்து வாடகைப் பணம் தரமுடியாத நிலையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்குமாறும் விண்ணப்பம் செய்தேன். அதுகுறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

கடந்த 18 வருடங்களாக பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்தும் தனக்கு எந்த ஒரு உதவியும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் தராமல் உள்ளதால் எனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...