கோவை தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஒத்திகை


தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, அந்த தாக்குதலை எதிர்கொள்வது எப்படி? என்றும், தாக்குதலின் போது மக்களை பாதுகாக்கும் வழிமுறை குறித்தும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் ஒத்திகை செய்தனர். 

நேற்று முன் தினம் கோவை வந்த 110 வீரர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒத்திகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் ஒத்திகை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

கட்டிடங்களில் வைக்கப்படும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அவற்றை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பது குறித்த ஒத்திகைகளை தொடர்ந்து 7 மணி நேரம் நடத்தினர்.

தேசிய பாதுகாப்பு படையினரின் இந்த ஒத்திகையின் போது உள்ளூர் போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் என யாரும் ஒத்திகை நடக்கும் கட்டிட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...