குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு - வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.09.2017) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் உப்பிலிபாளையம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து தனியார் கட்டுமான நிறுவன குடியிருப்புகள் அமைக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கட்சிசார்பற்ற  விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட சிலர் பாராட்டு தெரிவித்தனர்.



அப்போது, அதற்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துடன், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பாக பேசக்கூடாது என தெரிவித்தனர். குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசியதால்,  அரங்கில் இரு தரப்பு விவசாயிகள் சங்கத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதனைதொடந்து இரு தரப்பினரையும் மாவட்ட வருவாய் அலுவலர் சமரசப்படுத்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் தொடந்து நடைபெற்றது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...