தொடர்விடுமுறையால் வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்

பள்ளி தேர்வு விடுமுறை மற்றும் விழாக்கால தொடர்விடுமுறையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.



கோவை மாவட்டம் அடுத்துள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தளம் ஆகும். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு தொடர் விடுமுறை என்பதாலும் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



இதுகுறித்து வால்பாறை சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, கூலாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அதிகாலை பனிப் பொழிவு, குளிர்ச்சியான காலநிலை உள்ளிட்டவற்றை காண்பதற்காகவே விடுமுறை நாட்களை இங்கே கொண்டாட வந்துள்ளோம்.



இருப்பினும், வால்பாறையை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...