மதுபானக் கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர் மது போதையால் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மதுக்கடை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் மது குடித்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செங்கத்துறை கிராமத்தில் மதுக்கடைக்கு ஆதரவாக மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் செவ்வாய்க்கிழமையன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் மதுக்கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு அளவிற்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து புதன்கிழமை காலை தூக்கத்தில் இருந்து அவரை எழுப்பி உள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், மதுக்கடை வேண்டும் என ஆளும் கட்சியினர் குடிமகன்களை திரட்டி போராட்டம் மேற்கொண்டனர். அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மது வழங்கினர். அவர்கள் அளித்த இலவச மதுவால் தான் ஆறுமுகம் இறந்துவிட்டார் என்றனர்.

மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் கிராமத்தில் மது குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...