கோவை ராஜஸ்தானி சங்கம் சார்பில் இன்று பசுக்களை பாதுகாக்க நிதி திரட்டும் நடன நிகழ்ச்சி



கோவை, ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ராஜஸ்தானி சங்கம் சார்பில் கோவையில் ராஜஸ்தானி எரியூட்டு மையம் அமைக்கவும், பசுக்களை பாதுகாக்கவும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று (அக்.,7) மாலை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை ராஜஸ்தானி சங்கம் நடத்துகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் "கோசாலா"வுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது.



இது குறித்து கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஸ்வா அன் தேவ்ஜி டைமன்ட்ஸ் விஸ்வநாதன் மற்றும் ராஜஸ்தானி சங்க செயலாளர் பன்சி சங் சவ்கான் ஆகியோர் கூறியதாவது:-

"இளம் நடன கலைஞர்களை உருவாக்கி வரும் ராஜ் அட்ரோஜா டான்ஸ் ஸ்டுடியோ இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. நல்ல காரணங்களுக்கான நடனத்தை ராஜ் அட்ரோஜா இந்த நிகழ்ச்சியின் மூலம் துவக்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் 600 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோசாலாவுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது" என்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...