பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி-யில் இணைக்க வலியுறுத்தி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம்


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரியில் இணைக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 4500-க்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன.

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுதல், பெட்ரோல், டீசல் எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரியில் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாட்கள் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக லாரிகள் வேலை நிறுத்தத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 4500-க்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வேலைநிறுத்தத்தில் 65 சதவிகித லாரிகள் பங்கேற்றுள்ளதாகவும், இயந்திர உதிரி பாகங்கள், உற்பத்தி பொருட்கள், முட்டை உள்ளிட்ட பொருட்கள் கோவை மாவட்டத்தில் தேக்கமடைந்து இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...