வோடாபோன் பீரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டியில் விக்டர் அக்ஸல்சென், டாய் சு யிங் ஆகியோரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி


வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள வோடாபோன் பீரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் உலக தர வரிசையில் முதல் நிலை வீரர் விக்டர் அக்ஸல்சென் மற்றும் பெண்கள் பிரிவில் டாய் சு யிங் ஆகியோரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தியாவில் நடைபெற உள்ள வோடாபோன் பீரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி துவங்கி ஜனவரி மாதம் (2018) 14-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் உலக தர வரிசையில் முதல் நிலை வீரரான டென்மார்கை சேர்ந்த விகடர் அக்ஸல்சென் மற்றும் பெண்கள் பிரிவில் தாய்வான் நாட்டை டாய் சு யிங் ரியோ ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட தலை சிறந்த வீரர்கள் உட்பட 120 பேர் பங்கேற்கின்றனர்.

இந்த லீக் போட்டிகளில் டெல்லி ஏசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், சென்னை ஸ்மாஷர்ஸ், ஹதராபாத் ஹண்டர்ஸ், நார்த் ஈஸ்டர்ண் வாரியர்ஸ், அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் மற்றும் அவாதே வாரியர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் சார்ப்பில் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டிகள் சர்வதேச தரம் கொண்ட விளையாட்டு அரங்குகள் உள்ள மும்பை, ஹைதராபாத், லக்நவ், சென்னை, ஹவுஹாத்தி உள்ளிட்ட இடங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு இந்திய ரூபாயில் 6 கோடி ரூபாய் வரை பரிசுகள் வழங்கபடவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 3 கோடி ரூபாயும் 2ம் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு 1.5 கோடியும் 3 மற்றும் 4ம் இடம் பெற்ற வீரர்களுக்கு 75 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கபடவுள்ளது.

மேலும், ஒவ்வொரு அணியும் தங்கள் அணி சார்பாக விளையாடும் வீரர்களுக்கு இரண்டு கோடியே பன்னிரெண்டு லட்ச ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் ஒரு வீரருக்கு அதிகபட்சமாக 75 லட்ச ரூபாய் வரை ஏலம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வோடாபோன் சார்பில் நடைபெறும் போட்டிகளில் அதிகப்படியான பரிசு தொகை கொண்ட போட்டி என்ற காரனங்களால் உலக தரம் வாய்ந்த வீரர்கள் இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய பேட்மிண்டன் கழக தலைவர் ஹிமந்தா பிஸ்வா கூறும்போது, உலக அலவில் இந்திய பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் பிரபலமடைந்து வருகிறது. உலக தரம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 3-வது வோடாபோன் பீரிமியர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் இந்திய பேட்டிமிண்டன் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்றார். 

ஸ்போர்ஸ் லைவ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் அதுல் பாண்டே தெரிவிக்கையில், இந்தியாவில் நடத்தப்படும் பேட்மிண்டன் லீக் போட்டிகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வதே தங்களது நோக்கம். இந்த போட்டிகள் அனைத்தும் நேரிடையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார் மூலம் ஒளிபரப்பப்படுகிறது என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...