நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக உள்ளது- மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பேட்டி

நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.



கேரளாவில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங்  விமானம் மூலம் கோவை விந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

அரசியலில் வன்முறைகள் செல்லாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பாஜக-வால் தற்போது கேரளாவில் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்களை எதிர்த்த சுமார் 250 பேர் கேரளாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

டோக்லாம் பிரச்சனையை பிரதமர் இந்திய, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பில்லாமல் தீர்த்து வைத்துள்ளார். அனைத்து எல்லைகளிலும் நமது இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் தான் உள்ளது.

இவ்வாறு இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...