கோவையில் இந்த தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடப்பட்டுள்ளது - தீயணைப்புத்துறை அறிவிப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த தீபாவளி பண்டிகை பாதுகாப்பாகவே கொண்டாடப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, கணபதி, பீளமேடு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் என எட்டு  தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு, 16 தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 165 பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள ஏதுவாக உக்கடம், ஒப்பணக்கார வீதி, என்.எஸ்.ஆர். ரோடு, சத்தி சாலை, காந்திபுரம் மேம்பாலம், சிங்காநல்லூர் சிக்னல் ஆகிய பகுதிகளில் மாவட்ட தீயணைப்புத் துறை வாகனங்கள்  தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில்,  கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில் பெரிய அளவில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும், இந்த தீபாவளி பாதுகாப்பாகவே அமைந்தது என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பாக, தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் எந்த விபத்தும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் சிறிய அளவிலான மூன்று தீ விபத்துகள் ஏற்பட்டன. பீளமேடு எல்லைக்குட்பட்ட பகுதியில் ராக்கெட் பட்டாசு, விழுந்ததில் தென்னை மட்டையால் வேயப்பட்டிருந்த பந்தலில் சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. பொள்ளாச்சி மற்றும் கோவை தெற்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் ராக்கெட் பட்டாசு, மரங்களின் மீது விழுந்ததில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தீயை அணைத்தனர்.  பாதுகாப்பான தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...