ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால், கமலுக்கே எனது ஆதரவு -  நடிகை ஓவியா

ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு எனது ஆதரவு என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், தனியார் அமைப்பு சார்பாக "மக்களின் மனம் கவர்ந்த நாயகி 2017" என்ற நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தனக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்துள்ளதாகவும், மேலும், பட வாய்ப்புகளும் கிடைப்பதாகவும் கூறினார். தற்போது, காஞ்சனா படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 



மேலும், தன்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்காக நிச்சயம் எதாவது விரைவில் செய்வேன் எனக் கூறிய ஓவியா, அரசியலை சிலர் பணம் மற்றும் புகழுக்காக பயன்படுத்துவதாகவும், புகழ் மற்றும் பணம் கொண்ட கமல் அரசியலுக்கு வந்தால், கமலுக்கு தனது ஆதரவு நிச்சயம் உண்டு என தெரிவித்தார். மேலும், ரஜினி பற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாததால், கமலுக்கே தனது ஆதரவு எனவும் அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...