மாநகராட்சி சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்காத பைகள்

கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மக்கும் தன்மையுடைய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பைகளை அறிமுகம் செய்தார். மேலும், ஸ்வச் பாரத் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து "மை பேக் மை ஷாப்பிங் எக்ஸ்போ" மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத பைகள் குறித்து பொதுமக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார்.



இக்கூட்டத்தில் பங்கேற்ற ஹோட்டல் ஓனர்ஸ் அசோசியேஷன் ஆப் கோயம்புத்தூர் மற்றும் கேடெரெர்ஸ் அசோசியேஷன் ஆப் கோயம்புத்தூர் உள்ளிட்ட அமைப்புகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்துவோம் என உறுதியளித்தனர். 

முன்னதாக, தீபாவளி முதல் அன்னபூர்ணா குழுமம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதிக்காத மக்கும் பைகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தக் கூட்டத்தில் இந்தியா பிளாஸ்டிக் இன்ஸ்டிடியூட் கோயம்புத்தூர் சேப்டர் மற்றும் ரூட்ஸ் நிறுவனம் சார்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத மக்கும் பைகளை தயாரிக்கும் முறை குறித்து பிளாஸ்ட்டிக் பை தயாரிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.



மேலும், 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து கள ஆய்வின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...