வால்பாறை தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையை அடுத்துள்ள தனியார்  தேயிலைத் தோட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் வருடந்தோறும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்குவது வழக்கம்.



இந்நிலையில், நடப்பாண்டிற்கான போனஸ் கடந்த 7-ம் தேதி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 8.33 சதவிகிதம் போனஸ் தொகையாக தொழிலாளர்களின் வங்கிக்  கணக்கில் எஸ்டேட் நிர்வாகம் செலுத்தியுள்ளது.

இதையறிந்த தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோட்ட நிர்வாகத்தின் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் முன்பு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, விடுதலை கட்சியின் தொழிற்சங்க தலைவர் வீரமணி, கேசவமுருகன், ஐஎன்டியூசி பிரபாகரன், சிஐடியூ பரமன், ஹெச்.எம்.எஸ் மாணிக்கம், சோலையார் எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி முருகன் ஆகியோர் 17-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 20 சதவிகித போனஸ் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...