பேச்சுவார்த்தையில் உடன்பாடு- துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் நியாயமான போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சனையை 21 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி இன்று காலை முதல் நகரை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

2016-17 ஆம் ஆண்டுக்கான முறையான போனஸ், சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர், கிளீனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தீபாவளிப் பண்டிகை முடிந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், மாநகராட்சி அலுவலர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் ஒப்பந்த தொழிலாளர் சார்பாக முறையான தினக்கூலி, வார விடுமுறை, நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்குதல் மற்றும் நியாயமான போனஸ் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அளித்த உறுதிமொழிப்படி, குழுக்கள் அமைத்து மூன்று வாரங்களுக்குள் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் அலுவலர் லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...