கோவையில் எதிர்பார்த்த இலக்கை எட்டாத மது விற்பனை


கோவை மாவட்டத்தில், தீபாவளி அன்று மட்டும் 11 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 0.5 சதவிகிதம் குறைவு என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கவுண்டம்பாளையத்தை மையமாகக் கொண்டு வடக்கு என்றும், பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தெற்கு என்றும், மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் கோவை மாவட்டத்தில் இயங்கிவருகின்றன . இங்கு சாதாரண நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கும். தீபாவளி, பொங்கல், புது வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை இரு மடங்காக அதிகரிக்கும்.

அதன்படி, இந்த வருட தீபாவளிக்கு 12 கோடிக்கு மேல் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட 6 லட்சம் ரூபாய் குறைந்து, 11 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

இதில் வடக்கு பகுதியில் உள்ள மதுக் கடைகளில் ரூ.6 கோடியே 59 லட்சத்திற்கும், தெற்கு பகுதியில் உள்ள மதுக் கடைகளில் ரூ.5 கோடியே 26 லட்சத்திற்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து ஒரு டாஸ்மாக் அலுவலர் கூறியதாவது, "இந்த தீபாவளிக்கு அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலை உயர்வு மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட காரணங்களால் சென்ற ஆண்டு தீபாவளியை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்துள்ளது" என்றார்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 12 லட்சத்தி 46 ஆயிரத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனையை விட குறைவாகும்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...