அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சேவை மையங்கள் திறப்பு

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையப்பம்பாளையம், கரியம்பாளையம் ஊராட்சிகளில் கிராம சேவை மையங்களை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் இன்று திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி தெலுங்குபாளையம் கிராமத்திலும், கரியம்பாளையம் ஊராட்சி எல்லப்பாளையம் கிராமத்திலும் இன்று (அக்டோபர் 21) தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்களை சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 



இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் பேசுகையில், அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இப்பகுதி மக்களின் கனவுத்திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டம் நினைவாகி வருகின்றது. 

அதுமட்டுமல்லாமல், மேட்டுப்பாளையத்தில் இருந்து அவினாசி அன்னூர் பகுதிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட உள்ளது. புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணியும் வரும் வாரத்தில் துவங்கப்படவுள்ளது என்றார்.

இந்நிகழச்சியில், கோட்டாட்சியர் சின்னசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் பொறியாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, வட்டாட்சியர் ராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...