கோவையில் முதியோர்களுக்கான தடகளப் போட்டி துவக்கம்

கோவை மாவட்ட அளவில் முதியோர்களுக்கான தடகளப்போட்டி கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.



கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் முதியோர்களுக்கான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன . அதன்படி, நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் இன்று காலை முதல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன .

35 வயதிலிருந்து 80 வயதுக்கு மேலானவர்கள் பங்கேற்றுள்ள இந்த தடகளப் போட்டியில் வயதின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றது.



250 ஆண்களும், 60 பெண்களும் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தையம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் தடை தாண்டுதல் உட்பட இருபத்தைந்து வகையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.



இப்போட்டியில், 55 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவில் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும் மூத்தோர் தடகள சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...