சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பாரத் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



இது தொடர்பாக பாரத் சேனா அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது, சிங்காநல்லூர் பேருந்து பின்புறம் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை (1655) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் குடிமகன்கள்  சாலையின் இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.  இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

அதுமட்டுமில்லாமல்,  அந்த டாஸ்மாக்க கடையில்  மது அருந்திவிட்டு சாலையின் ஓரம் நின்று கொண்டு தகாத முறையில் பேசுவதாலும், தகாத செயல்களை செய்வதாலும் அவ்வழியாக செல்லும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்மார்கள், மிகுந்த அச்சத்துடன் செல்லக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லக் கூடிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இங்கு 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எனவே, அக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில்,  பாரத் சேனா தமிழ்நாடு சார்பில், பொதுமக்களோடு இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...