தீத்திபாளையம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

தீத்திபாளையம் பகுதியில் ஆட்டைத் தாக்கி சிறுத்தை கொன்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.



கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது தீத்திபாளையம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வழக்கம்.

இந்நிலையில், புதனன்று (இன்று) அதிகாலை 2 மணியளவில் தீத்திபாளையத்திற்கு உட்பட்ட வேடப்பள்ளம் பகுதியில் நுழைந்த சிறுத்தை அங்கு வி.ஆறுச்சாமி (52) என்பவருக்கு சொந்தமான ஆடுகளைத் தாக்கியது. 

இதனைத்தொடர்ந்து, ஆடுகளின் அலரல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த ஆறுச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. மேலும், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



இதுகுறித்து ஆறுச்சாமி கூறுகையில், நான் இப்பகுதியில் சுமார் 13 வருடங்களாக வசித்து வருகின்றேன். இதுபோன்ற சம்பவத்தை பார்ப்பது இதுவே முதன்முறை. இரவு ஆடுகளை கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த சிறுத்தை தாக்கி எனது 4 வயது மதிக்கத்தக்க பெண் ஆடு உயிரிழந்துவிட்டது. மேலும், பல ஆடுகள் காயமடைந்துள்ளன. அந்த சிறுத்தை மீண்டும் இங்கு வர வாய்ப்புள்ளது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...