புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடைகள் சேதம்

மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளிலிருந்து பயனிகள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன.

இன்று மாலை 4மணியளவில் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த 10C பேருந்து (TN 38 N2263), அதிவிரைவாக வளைந்து நடைமேடையை இடித்ததால் நடைமேடை முழுவதும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷடவசமாக அதன் அருகே நின்றிருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.



இச்சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறியதாவது,:  அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பேருந்து, நிறுத்துவதற்காக வலதுபுறம் திருப்பப்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நேராக நடைமேடையில் இடித்து நின்றது. இதனால் நடைமேடை முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது..

சரியாக பேருந்தை நிறுத்தக்கூட தெரியாத ஓட்டுநர்கள், எப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது' என்றார்.

பேருந்து நிலைய கண்காளிப்பாளரிடம் இச்சம்பவம் பற்றி கேட்டபோது, நகரப் பேருந்துகள் உள்ளே நிறுத்துவதற்கு அனுமதியே இல்லை என்பது தெரிய வந்தது.

அரசு விதிகளையும் சாலை விதிகளையும் அலட்சியமாக கடந்து செல்லும் ஓட்டுநர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...