தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை - சேலம் இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றம்

ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - சேலம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் உள்ள தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக. அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை கோவை - சேலம் இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இதையறிந்து பயணிகள் அதற்கேற்றவாறு, பயணத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாற்றியமைக்கப்பட்ட ரயில்களின் விபரம் பின்வருமாறு :- (அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை)

ரயில் எண் : 13352, அலப்பி தன்பாத் / டாடா எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12678, எர்ணாகுளம் பெங்களூரூ எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் கோவையில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 16859, சென்னை எக்மோர் மங்களூரூ எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 13351, தன்பாத் /  டாடா - அலப்பி எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12677, பெங்களூரூ எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் இருகூரில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது. 

ரயில் எண் : 12675, சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் 55 நிமிடங்கள் ஈரோட்டில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.

ரயில் எண் : 12676, கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் 55 நிமிடங்கள் ஈரோட்டில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.    

   

ரயில் எண் : 12243, சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் சதப்தி எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் சேலத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படுகிறது.    

   

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...