பா.ஜ.க.வைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் வரும் நவம்.,3-ம் தேதி போராட்டம்

கோவை, அக்டோபர் 28: விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது பா.ஜ.க.வினர் நடத்தும் தாக்குதல்களை கண்டித்து வரும் நவம்பர் 3-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசுகையில்,  கமல்ஹாசன் மக்கள் பணியாற்றுவதை விசிக சார்பில் வரவேற்கிறேன். இத்தனை காலம் கலைத்துறையில் இருந்தவர், தற்போது அரசியல் துறையில் தீவிரமாக களம் இறங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியினர் ஆங்காங்கே திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மெர்சல் படம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜனின் கருத்துக்கு அரசியல் ரீதியான கருத்தைதான் பதிவு செய்தேன். மெர்சல் திரைபடத்தில் நடிகர் விஜய் பெரிதாக ஏதும் பேசிவிடவில்லை. ஆனால், இந்த படத்தை பா.ஜ.க.வினர் ஏன் இவ்வளவு விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக என்மீது தனிநபர் விமர்சனத்தை வைத்தார்.

இதைக் கண்டித்து வி.சி.க.வினர் ஆங்காங்கே அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். ஆனால் கரூரிலும், மயிலாடுதுறையிலும் நேரடியாக பா.ஜ.க.வினர், வி.சி.க. மீது தாக்குதல் நடத்தினார்கள். தமிழக காவல்துறை அ.தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறதா இல்லை, பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறதா எனத் தெரியவில்லை. மேலும், பா.ஜ.க.வினர் நேரடியாகவும், சமூகவலைதளங்கள் மூலமாகவும், தேவையற்ற கருத்தை பரப்பி வருகின்றனர்.

வி.சி.க. தேர்தலுக்காக கட்சி நடத்தவில்லை, மக்கள் பணியாற்ற நாங்கள் நெடுந்தூரம் இலட்சியத்திற்காக பயணிக்க வேண்டியிருக்கிறது. மேலும்,  தமது கட்சியினருக்கு பல மக்கள் பணிகள் இருக்கிறது. குறிப்பாக, கந்துவட்டி பிரச்சினை தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. அதை ஒடுக்க வேண்டும். யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற விமர்சனங்களை மற்றவர்கள் மீது வைக்க கூடாது. மக்களுக்கு யார் கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார்கள் என்று பொதுமக்களுக்கு தெரியும். இதை மக்கள் பார்வைக்கு விட்டுவிடலாம்.

மேலும், பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வி.சி.க.வினர் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.  ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. இது ஆட்சி நிர்வாகம் வலுவிழுந்ததைக் காட்டுகிறது. உடனடியாக சர்க்கரை விலை உயர்வைக் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...