கேஎம்சிஎச் சார்பில் -நுரையீரல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு

கோவை, அக்டோபர் 29: கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையை (கேஎம்சிஎச்) சேர்ந்த நுரையீரலியல் துறை நுரையீரல் நோய்களை குணப்படுத்துவதில் மட்டுமின்றி நுரையீரல் நோய் சிகிச்சைகளில் புதுமைகளை செய்வதிலும் தீவிரம் காண்பித்து வருகிறது.

ஏற்கனவே இந்த துறையில் பெற்றிருக்கும் அறிவை மேம்படுத்துவதற்காக கற்பித்தல் நிகழ்ச்சிகளை மருத்துவர்களுக்கு நடத்தியுள்ளது.

"TAPING 2017" என்பதும் அதுபோன்ற ஒரு முயற்சிதான். இந்த ஒரு நாள் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது. இதில், நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு செயல்முறைகள் பற்றி கற்பிக்கப்பட்டன. நுரையீரல் மருத்துவர்களும் மற்றும் இந்த துறையில் முதுநிலை கல்வி பயின்றோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தப் பயிலரங்கில் விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி அவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.



தோராக்கோஸ்கோபி என்பது உட்புற பரிசோதனை, பயாப்ஸி, மற்றும் பற்சிகர வளைவு மற்றும் தோராசிக் குழிக்குள்ளான நோய்களின் மருத்துவ செயல்முறை ஆகும். இதன் பரிசோதனை முறையானது, நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு மிகவும் பயன்படக் கூடிய மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறை என்று மருத்துவர் எஸ். சாந்த குமார் மற்றும் மருத்துவர் ஜே.வேணுகோபால் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் உரையாற்றிய கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி கூறியதாவது:- நுரையீரல் சிகிச்சை துறையில் தொடர்ந்து புதுமைகளை புகுத்துவதில் கேஎம்சிஎச் மருத்துவமனை பெருமைகொள்கிறது. நுரையீரல் இயல்துறையில் மருத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள இந்த கருத்தரங்கு பெரும்பங்காற்றியுள்ளது என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...