டெங்குவின் புகலிடமாகும் கலிக்கநாயக்கன்பாளைய கழிவுநீர் சாக்கடைகள்

கோவை, அக்டோபர் 29: டெங்கு மற்றும் அதன் விளைவுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை புறநகர் பகுதியான கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேட்டினால் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.



குப்பைத் தொட்டிகள் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த கழிவுநீர் சாக்கடைகள் போதிய பராமரிப்பின்றி திறந்த நிலையில் விடப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள். இதன் விளைவாக இக்கிராமத்தில் ஒன்பது வயது பெண் குழந்தைக்கு டெங்கு அறிகுறிகள் ஏற்பட்டு தற்போது கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



கலிக்கநாயக்கன்பாளையம், 6-வது வார்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள எஸ்.ஜோதிமணி (60) எனும் தனது தாத்தா வீட்டிற்கு மதுக்கரையில் இருந்து ஜே. சவுதிகா (6) வந்துள்ளார். அங்கு வசித்து வந்த அவருக்கு சில நாட்களில் காய்ச்சல் ஏற்படவே தொண்டாமுத்தூர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சவுதிகாவிற்கு டெங்கு அறிகுறிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கோவை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுதிகாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிகிச்சைக்குப் பின் சிறுமியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அக்கிராமத்தில் இது முதல் டெங்கு பாதிப்பு என்பதால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கே.எம்.பரதன் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாய்களை முறையாக மூடி வைக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். மேலும், குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படாததால் பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடையிலேயே வீசப்படுகின்றன. இவை மொத்தமுமாக அடைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துப்புரவுப் பணியாளர்களும் உரிய நேரத்தில் இதனை சுத்தம் செய்வதில்லை. நகர் முழுவதும் டெங்கு உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்கள் பரவிவரும் சூழ்நிலையில் இங்கு அதிகளவிலாக டெங்கு கொசுகள் உருவாகி தற்போது ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்' என்றார்.



இதுகுறித்து கருத்துகேட்கும் வகையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் தொடர்ந்து அழைப்பை புறக்கணித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...