சர்தார் படேலின் பிறந்த நாளையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சேலத்தில் மாரத்தான் ஓட்டம்

கோவை, அக்டோபர் 31: தேசிய ஒருங்கிணைப்பு தினத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் இன்று (31.10.2017) மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒருங்கிணைப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள சேலம் ரயில்நிலையத்தில் இருந்து சேலம் கோட்ட அலுவலக வளாகம் வரை ஒருங்கிணைப்பு தின மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 



சேலம் சோனா கல்லூரி, சேலம் செயின்ட் ஜோசப் மகளிர் பள்ளி, சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த மாரத்தான் ஓட்டத்தை சேலம் சந்திப்பு ரயில்நிலையத்தில் இருந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, அங்கு குழுமியிருந்தவர்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அவர் செய்து வைத்தார். அவர் பேசுகையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரே நாடாக ஆக முழுக்காரணம் சர்தார் வல்லபாய் படேல்தான். தேச ஒருமைப்பாட்டுக்கு அவரது பங்களிப்பை ஒவ்வொரு இந்தியனும் நன்றியுடன் நினைவு கூற வேண்டும். என்றார்.



இந்த நிகழ்ச்சியில், சேலம் கோட்ட மகளிர் நல அமைப்பின் தலைவி திருமதி. அனிதா வர்மா, சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு.விஜுவின், சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் திரு.பொன்ராஜ், சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் திரு.ஷாஜஹான் மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இது போன்ற நிகழ்ச்சிகள் சேலம் கோட்டத்தின் ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், கரூர் மற்றும் சேலம் டவுன் போன்ற ரயில்நிலையங்களிலும் பல்வேறு கோட்ட அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...