சார்ஜாவில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவர் கைது

கோவை, நவம்பர்.5: சார்ஜாவில் இருந்து 583 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சார்ஜாவிப் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்படி சனிக்கிழமை அதிகாலை கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். 

அப்போது அவர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முகம்மது சலீ (29) என்பதும்  வயிற்றுபகுதியில் வைத்து 583 கிராம் எடையுள்ள 5 தங்க கட்டிகள் கடத்து வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து தங்க கட்டிகளை பரிமுதல் செய்த அதிகாரிகள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.18 லட்சம் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...