டெங்கு காய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த வாலிபர் பலி

கோவை, நவம்பர்.16

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாலிபர் பலியான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மரக்கடையை அடுத்த சந்திரன் வீதி பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவரது மகன்   இப்ராகிம் (32). 

காய்ச்சல் காரணமாக இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இப்ராகிம்-ஐ அவரது உறவினர்கள் தன்னிச்சையாக வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில், இன்று காலை அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்ராகிம்-ன் குடும்பத்தார் அவரை ம மீண்டும்  அதிகாலை 5 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு மீண்டு அழைத்து வந்தனர். 

அங்கு மருத்துவர்கள்  சிகிச்சை அளிக்க தொடங்கிய சிறிது நேரத்திலே இப்ராகிம்  உயிரிழந்தார். 

கோவையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை சற்றே ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியிருப்பது பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...