தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி கடன் உலக வங்கி வழங்க உள்ளது. - சுகாதாரத்துறை அமைச்சர்


கோவை, நவம்பர் 17

தமிழ்நாடு சுகாதாரத்திட்டத்திற்கு உலக வங்கி ரூ.2,600 கோடி வட்டியில்லா கடன் அளிக்க இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெம் மருத்துவமனையில் உடல் எடை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர், ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேல் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர், 'தமிழகத்தில் 10 முதல் 13 விழுக்காடு மக்கள் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவும் தன்மை நோய்களை விட பரவாத தன்மை கொண்ட உடல் எடை, ரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளாறு ஆகிய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றார். 

தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சல் வார்டில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தமிழக அரசின் மருத்துவத்துறை இந்தியாவின் மைல்கல்லாக விளங்குகிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்டம் மூலம் மக்களின் சுகாதாரம் பேணிக்காக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக உலக வங்கி தமிழக அரசுக்கு ரூ.2,600 கோடி வட்டியில்லா கடன் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதேபோல் ஜெய்கா என்ற இந்திய-ஜப்பானிய ஒப்பந்தம் மூலமாக ரூ.286.62 கோடி நிதி கோவை அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கோவை அரசு மருத்துவமனையின் தரம் இன்னும் மேம்படும்.



சென்னை அரசு மருத்துவமனையைப்போல் கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டெங்கு காய்ச்சலை கண்டறியும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 536 கருவிகள் வழங்கியுள்ளோம். இதன்மூலம் ஒரு நபர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை உடனடியாக அறிய முடியும். 

தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவிகிதம் ஆயிரத்துக்கு19 ஆக இருந்து 17 ஆக. வரும் 2030-ம் ஆண்டுக்குள் குழந்தை இறப்பு விகிதம் 10 ஆக குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டிலேயே தமிழகம் அந்த நிலையை எட்டிவிடும். இவ்வாறு அவர் கூறினார். 

மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது அவரை வழிமறித்த பெண் தனது மகன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி கதறி அழுதார். மேலும், மகனுக்கு முறையாக சிகிச்சை அளிக்க அமைச்சர் சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 



இதேபோல், செவிலியர்கள் பற்றாக்குறையால் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ஆவண செய்ய வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வலியிறுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...