உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது- சுகாதாரத் துறை அமைச்சர் பேட்டி


கோவை, நவம்பர் 17

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் கூறினார்.

கோவையில், தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழக சுகாதார துறை அமைச்சர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை மருத்துவ தலைமையிடம் என்பதை மாற்றி அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, மாவட்ட மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 280 கோடி ரூபாய் ஜெய்கா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 837 ரத்தவகை கண்டறியும் கருவி வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகம் முழுவதும் சமீபத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத் துறையில் போலியாக செயல்படும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...