தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் காரணம் எனக் கூற முடியாது - சீமான்

நவம்பர் 26

திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் காரணம் எனக் கூற முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரபாகரனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தை சீமான் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை முடிவை தவிர்த்திருக்கலாம். அவரது இழப்பு மனதிற்கு வருத்தமளிக்கிறது. அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என்று சொல்லமுடியாது. அன்புச்செழியன் திரையுலகில் இல்லை என்றால் பாதிப்படங்களுக்கு மேல் வெளியாகி இருக்க முடியாது. சினிமா உலகில் வட்டிக்குக் கடன் வாங்கும் நிலை புதிதல்ல. இது தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடப்போவதாகவும், வரும் 29-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் சீமான் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...