முதலமைச்சர் அணிக்குத் தாவிய 3 தினகரன் ஆதரவு எம்பிக்கள் - அதிமுகவில் பரபரப்பு

நவம்பர் 27

டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா மற்றும் புதுச்சேரி எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு மாறினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் என அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர், சின்னமும், கட்சியும் தங்களுக்குத்தான் சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பினரும் முறையிட்டனர். இதனைக் கேட்ட தேர்தல் ஆணையம், இரட்டை இலைச் சின்னத்தை தற்காலிகமாக முடக்கியது. இதனிடையே, இரு தரப்பினரும் ஒருங்கிணைவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. 

அப்போது, சசிகலாவின் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தால் மட்டுமே இரு அணிகளும் ஒன்றிணையும் என ஓபிஎஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டதால், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக உருவானது. மேலும், கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட தினகரனுக்கு 18 எம்எல்ஏக்களும், சில எம்பிக்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்குத்தான் எனத் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதனால், தினகரன் கூடாரம் கலகலக்கத் தொடங்கியது. தினகரன் அணியில் இருந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் தொண்டர்களும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு தாவத் தொடங்கினர். 

இந்த நிலையில், தினகரன் அணியில் இருந்த அதிமுக மாநிலங்களவை எம்.பி.யான நவநீதகிருஷ்ணன் இன்று திடீரென முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். மேலும், எம்பிக்கள் விஜிலா  புதுச்சேரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். பின்னர், ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்பிக்கள் மூவரும் கலந்து கொண்டனர். இதேபோல, தினகரன் அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியில் இணையக் கூடும் எனக் கூறப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...