தயாரிப்பாளர் தற்கொலை விவகாரம் - அன்புச்செழியனின் மேலாளர்கள் கைது

நவம்பர் 29 

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் உறவினரும், அவரின் அலுவலக மேலாளர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்திற்கு பைனான்சியர் அன்புசெழியன் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து. அன்புசெழியன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அன்புசெழியனின் நண்பர் மற்றும் அவரின் கோபுரம் பிலிம்ஸ் மேலாளரிடம் போலீசார் நேற்று ரகசிய விரசாணை நடத்திய நிலையில், இன்று அன்புசெழியனின் அலுவலக மேலாளர் முருகன், சென்னையில் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் இந்தக் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேபோல், அன்புசெழியனின் மற்றொரு மேலாளர் சாதிக்கும் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, ஐதரபாத்தில் தலைமறைவாக இருப்பதாகக் கூறும் அன்புச்செழியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...