இரட்டை இலை விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு

நவம்பர் 30

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. கடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணியினரும், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடினர். இதனால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்தன. இதனால், இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரும் போட்டி, எடப்படி பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையில் மாறியது. இரு தரப்பினரும் தலைமை தேர்தல் ஆணையத்தில் தங்களுக்குச் சாதகமான ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். அந்த ஆவணங்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 கட்டங்களாக விசாரணை நடத்தினர். கடந்த 24-ந்தேதி இந்த வழக்கில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு “இரட்டை இலை” சின்னத்தை ஒதுக்கீடு செய்து அறிவித்தனர்.

நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள டிடிவி தினகரன் அணியினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தாலும், தங்கள் கருத்தை கேட்காமல் வெளியிடக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் ஏற்கனவே கேவியட் மனுதாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...