அமேசான், பேடிஎம் பயன்படுத்தவும் இனி ஆதார் கட்டாயம்

மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், இனி அமேசான், பேடிஎம் போன்றவைகளைப் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. மொபைல் எண்கள், வங்கிக் கணக்கு ஆகியனவும் ஆதாருடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது இன்டர்நெட் கம்பெனிகளின் சேவைகளை பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக பெங்களூருவைச் சேர்ந்த வாடகை கார் நிறுவனமான ஜூம்கார், வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளத்திற்காக முன்பதிவின் போது ஆதார் எண்ணை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆதார் எண் இல்லாத புக்கிங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

தற்போது, அமேசான் நிறுவனமும், வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகிறது. ஒருவேளை வாடிக்கையாளர் ஆதார் எண்ணை தர மறுக்கும் பட்சத்தில், அவரைப் பற்றிய பிற விபரங்களை பெற முடிவு செய்துள்ளது. இதே போன்று மொபைல் வேலட்டான பேடிஎம் சேவையை பயன்படுத்தவும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாடகை கார் நிறுவனங்களான ஊபர், ஓலா ஆகியனவும் வாடிக்கையாளர்களை ஆதார் மூலம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகின்றன.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...