கோவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் - வைகோ சந்திப்பு

கோவை, நவம்பர் 30

கோவை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு "அரசியல் நாகரீகத்துக்காக"  நிகழ்ந்ததாக வைகோ தெரிவித்துள்ளார். 

இந்தச் சந்திப்பிற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. பிரதமர் மோடி, நீயூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இந்தத் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல், தோப்புக்கரணம் போடும் அரசாக இருக்கின்றது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து வருகின்றது.

மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராடுவோம். 

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி உயிரிழந்த ரகுவின் மரணம் வருத்தம் அளிக்கின்றது. இந்த உயிரிழப்பிற்கு அரசேக் காரணம். ஆர்.கே. நகர் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாட்டினை வரும் 3-ம் தேதி காலை தெரிவிப்பேன். என்றார்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்குள் சென்ற வைகோ, திமுக செயல்தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சிறிது நேரம் பேசினார். பிறகு, இந்தச் சந்திப்பு தொடர்பாகச் செய்தியாளர்களிடம் மீண்டும் பேசிய அவர், அரசியல் நாகரீகத்துக்காக  இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பதில் தவறில்லை. விமான நிலையங்களில் சந்திப்பு நடப்பது வழக்கமானது. மேலும், தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...