செல் போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்கி விபத்து ஏற்பட்டதில் 2,138 நபர்கள் உயிரிழந்துள்ளனர்

கோவை, டிசம்பர் 1

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் 4,091 பேரும், பல்வேறு இருசக்கர வாகன விபத்துக்களில் சிக்கி 5,666 பேரும் குடி போதையில் வாகனம் ஓட்டியதால் 6,131 பேரும், செல் போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்கி விபத்து ஏற்பட்டதில் 2,138 பேரும் உயிரிழந்துள்ளனர். இதை மாணவ மாணவிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.



போக்குவரத்து விதிகளை அனைத்து தரப்பினரும் முறையாக பின்பற்ற வேண்டி கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிதது வருகின்றனர். 

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, கோவை ராஜ வீதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி-யில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இன்று போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.

மாநகர போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைத்த இந்த பயிற்சி வகுப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மாணவிகளிடம் போலீசார் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். 



வருங்கால வாகன ஓட்டிகளான நீங்கள் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக குறையும். சாலை விதிகளை நீங்கள் கடைபிப்பது மட்டுமல்லாது உங்கள் குடும்பத்தினரையும் அவற்றை மதிக்க கற்றுக்கொடுங்கள்.

இவ்வாறு போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...