உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

கோவை, டிசம்பர் 1

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 30 கல்லூரிகளைச் சேர்ந்த 1500 மாணவர்கள் பங்கேற்றனர்.



முன்னதாக, இரத்தத்துடன் வரக் கூடிய சளி, எடை குறைதல், பாதுகாப்பான உடல் உறவு, முறையான சிகிச்சை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.



இதில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...