கோவையில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - ஏற்பாடுகள் தீவிரம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாளைக் கோவையில் நடைபெறுவதையொட்டி,  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவைப் போற்றும் வகையிலும், அவர் மக்கள் நலனுக்காக ஆற்றிய பணிகள் அவரது வரலாறு ஆகியவை குறித்து இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிகச் சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில்,  முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, தொடக்கவிழா கடந்த ஜூன் 30 மதுரை மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவானது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா  நடைபெறும் மாவட்டங்களில், எம்ஜிஆர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் மூலம் ஆற்றிய சமூகத்தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியும், பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்திடும் வகையில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணாக்கர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மேலும், எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை விழாவின்போது பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன.  எம்ஜிஆர் பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப்புறங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டுள்ளன. 

அந்த வகையில் தமிழகத்தில் 28-வது மாவட்டமாகக் கோவை மாவட்டத்தில் உள்ள வஉசி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆர் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ.691. 69 கோடி மதிப்பிலான 37 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.1328. 95கோடி மதிப்பில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், 36,988 பயனாளிகளுக்கு ரூ.118.83 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளனர். 

இவ்விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கவும், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கவும் உள்ளனர். மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுவார்கள். மேலும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகிப்பார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்ற உள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் நன்றியுரையாற்ற உள்ளார். 

பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை எம்ஜிஆர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும்   நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி   அறிவுரையின் பேரில், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...