எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை தவறவிட்டுவிட்டனர்- சீமான்

கோவை, டிசம்பர் 3

புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தனித் தீவு போலக் காட்சியளிப்பதாகவும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை காக்க தவறவிட்டுள்ளனர் என்றும் சீமான் பேட்டியளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

தற்போது ஏற்பட்ட புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. அரசு சார்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, மீட்புப் பணிகளும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையற்ற அதிமுக-வினர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

கோவையில் ரகுபதி என்னும் இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பேனர் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நிற்பதாக அமீர் கூறியது குறித்து நாளை முடிவு செய்வோம். மேலும், அன்புசெழியன் விஷயத்தில் அமீருக்கும்  எங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தலைப் போல் இந்தத் தேர்தலையும் நடிகர் விஷால் நினைக்கிறார், வரட்டும் பார்க்கலாம். திரைப்படத்துறை பாதுகாப்பு இல்லாத துறையாக இருக்கிறது. வட்டிக்கு பணம் பெற்றுத்தான் இந்தத் துறையில் வேலை பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே, அரசு இதனை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...