கோவையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வடிவமைப்பை மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை, டிசம்பர் 4

கோவை நஞ்சப்பா சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் பார்க் கேட்டிலிருந்து டெக்ஸ்டூல் பாலம் வரை ரூ.120 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில், நஞ்சப்பா சாலையிலிருந்து கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, வி.கே.கே.மேனன் சாலை, ஆவாரம்பாளையம் சாலைக்குச் செல்ல வாகன ஓட்டிகள் பாலத்தின் கீழேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல, கணபதியிலிருந்து காந்திபுரம் வரவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காந்திபுரம் பகுதிக்கு வர கீழேயே வர வேண்டிய சூழல் உள்ளதால் காந்திபுரம் பகுதியில் எப்போதும் போல போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், பாலத்தின் வடிவமைப்பை மாற்றிப்பதுடன், ரவுண்டானா அமைத்துத் திறக்கப்பட்டுள்ள புதிய பாலத்துடன் இணைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் பேருந்து நிலையத்திற்கும் கிராஸ்கட் சாலைக்கு வரக்கூடிய வகையில், தமிழக அரசு முடிவு செய்தபடி சுரங்க நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...