கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல் : உணவு பாதுகாபுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை, டிசம்பர் 5

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலாக்களை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலாக்களை தமிழகத்தில் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில்,பெங்களூரில் செயல்படும் எஸ்.எம்.பி.கே. என்ற நிறுவனம் தனியார் பேருந்தின் மூலமாக கோவைக்கு பான்மசாலக்களை கடத்தி வருவதாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் B. விஜயலலிதாம்பிகை, மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் K. சந்திரன், S.R. ஜெரால்டு, M. வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழு நவ இந்தியா அருகே உள்ள வெளியூர் பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்குச் சென்றனர்.

இன்று அதிகாலை 3:30 மணியளவில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான பான் மசாலாக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்த் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.B. விஜய லலிதாம்பிகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலாக்களை கோவைக்கு சிலர் கடத்தி வருகின்றனர். 

இந்த கடத்தல் குறித்த தகவல் அறிந்த உடன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி, இன்று பெங்களூரில் இருந்து 15 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான பான்மசாலக்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தையும் பறிமுதல் செய்தனர். அதோடு, பேருந்தின் ஓட்டுனரான மோகன்குமார் (42) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



கோவையில் தடைசெய்யப்பட்ட இவ்வகை பான்மசாலாக்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 31 உணவு பாதுகாப்பு அலுவலகர்களும் கடைகளில் ஆய்வு நடத்தி விற்பனைக்காக வைக்கப்பட்ட பான் மசாலக்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். தடைசெய்யப்பட்ட பான்மசாலக்கள் விற்பனை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதற்கான தொலைபேசி எண்கள் 960087386, 9444042322. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...