ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி: இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மவுனப் பேரணி

டிசம்பர் 05

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அதிமுகவினர் மவுன ஊர்வலமாகச் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. அவரது உடல் எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மவுன ஊர்வலமும் நடைபெற்றது. 

அண்ணா சிலையில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜாரோடு, விருந்தினர் மாளிகை வழியாகச் சென்று மெரினா கடற்கரையை அடைந்தது. அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரது சமாதியில் பெண்கள் சிலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அண்ணாசாலை முதல் எழிலகம் வரையிலும் கடற்கரை சாலைப் பகுதி முழுவதும் அதிமுகவினர் குவிந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் டிடிவி தினகரன் அணியினரும் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...