பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்பு

கோவை, டிசம்பர் 5

பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற்ய் உயிரிழந்த  கல்லூரி மாணவர்கள் இருவரின் உடல்கள்  மீட்கப்பட்டன .

அன்னூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் கோகுல்ராஜ் (20), அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் குகன் (20). கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக  அன்னூரில் இருந்து சிறுமுகையை அடுத்த பழந்தோட்டம் பாலம் அருகே குளிக்கச்சென்றனர். 

நீண்ட நேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் சம்பவ இடத்திற்குச் சென்று மாயமானவர்களை தேடினர். 

அப்போது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மற்றும் செல் போன்கள் ஒரு பகுதியில் இருந்தது. மாணவர்கள் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தினர்.  உடனடியாக மாணவர்களை தேடும் பணி நடைபெற்றது. 

இன்று காலை வாகனம் நிறுத்தப்பட்ட பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் குகனின் உடல் கைப்பற்றப்பட்டது.  தொடர்ந்து மதியம் கோகுல் ராஜ்-ன் உடல் மீட்கப்பட்டது. ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...