மண் வளத்தைப் பாதுகாப்பதில் மண்ணியல் விஞ்ஞானிகளின் பங்கு மிகவும் முக்கியமானது : துணைவேந்தர்

கோவை, டிசம்பர் 05

மண் வளத்தைப் பாதுகாப்பதில் மண்ணியல் விஞ்ஞானிகளின் பங்கு மிகவும் முக்கியமானதுஎன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கு. ராமசாமி இன்று கூறினார்



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேம்பாட்டு இயக்கத்தில் அமைந்துள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் சார்பில் இன்று உலக மண் தினம் கொண்டாடப்பட்டது. அதில் தலைமையேற்ற  துணைவேந்தர்இன்றைய வேளாண் மண் அறிவியல் விவசாயிகளை முன்னிலைப் படுத்தி அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டார்

 

துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் கோ. அருள்மொழிசெல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். பயிர் மேலாண்மை இயக்குநர் சி. ஜெயந்தி,  பி.ராமமூர்த்தியின் ஆறாவது நினைவு விரிவுரை ஆற்றிய நாக்பூரின் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய மண் அளவை மற்றும் நிலப்பயன்பாடு திட்டமிடல் மைய முன்னாள் இயக்குநர் எம். வேலாயுதம் அறிவியல் பணிகளை எடுத்துரைத்தார். 



  

விவசாய நிலங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில் தேசிய மண் சுகாதார அட்டைத் திட்டம் தொடங்கப்பட்டது. நிலையான பசுமை புரட்சிக்கு முன்னோடி திட்டமாக மண்வளத்தைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மண் பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் மண்ணைப் பரிசோதித்து உரப் பரிந்துரை அளிப்பதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதோடு பெருகி வரும் மக்கள் தொகைக்கான உணவு உற்பத்தியையும் அடைய முடிகிறது.

மண்ணின் மகத்துவத்தை அறிந்து ஐ.நா சபையானது கடந்த 2015 ஆம் ஆண்டைச் சர்வதேச மண் வருடமாக அறிவித்தது. வியன்னாவிலுள்ள சர்வதேச மண்ணியல் அமைப்பு 2015 முதல் 2024 வரையுள்ள 10 ஆண்டுக் காலத்தை மண்ணிற்கானதாக அறிவித்தது. இந்நிகழ்வின்போது, பயிர்களுக்கும், மண்வளத்திற்கும் மகசூல் இலக்கிற்கும் ஏற்ற உரப்பரிந்துரைகள் தமிழ்நாட்டின் பழங்குடி கிராமங்களில் விரிவாக்கச் செயல்பாடுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் என்ற தமிழ் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலில், பயிர் ஊட்டச்சத்துக்களின் செயல்பாடுகள் மற்றும் பற்றாக்குறை அறிகுறிகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், மண்ணியல் துறையில் செயல்படும் அகில இந்திய ஒருங்கிணைந்த மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்புத்திறன் தொடர்பளவு திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கச் செயல்பாடுகள் பற்றிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...