கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி ஆதித்தமிழர் கட்சியனர் ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 6

கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



சட்ட மேதை அம்பேத்கரின் சிலையை கோவையில்  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2009-ம் ஆண்டும் முதல் நிலுவையில் உள்ளது.

இதற்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்காததாக கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து ஆதித் தமிழர் கட்சியினர் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 

இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த வெண்மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளோம். சிலை நிறுவ  மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார்.  ஆனால், சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக தலைவர்கள் சிலை நிறுவப்படக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சிலை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்து வருகிறத். இதனை கண்டித்து ஆண்டு தோறும் டிசம்பர் 6-ம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனுமதி வழங்கப்படும் வரையில் முற்றுகை போராட்டம் தொடரும்' என்றார். 

இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திடீரென காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.  அவர்களை தடுத்த போலீசார் சுமார் 10 நிமிடம் காவல் ஆணையர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை பூட்டினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...