நாளை முதல் ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை தற்காலிகமாக மூடல்

கோவை, டிசம்பர் 6

ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளால் ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால், மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்குக் கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை மற்றும் அவினாசி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியப் பாதையாக ஆவாரம்பாளையம் சாலை கருதப்படுகிறது. நாள்தோறும், ஆயிரக்கணக்கானோர் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றனர். கணபதி - ஆவாரம்பாளையம் இடையிலான சாலையில் ரயில்பாதையும் இருக்கிறது. ரயில் செல்லும் போது, ரயில்வே கேட் மூடப்படுவதால், பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். 

இந்த நிலையில், ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை நாளை (டிச.,07) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே, பாதை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், அதுவரை மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...